• Tidak ada hasil yang ditemukan

தமிழகத்தில் தேவரடியார் முறை

N/A
N/A
Protected

Academic year: 2024

Membagikan "தமிழகத்தில் தேவரடியார் முறை"

Copied!
15
0
0

Teks penuh

(1)

தமிழகத்தில் ததவரடியார் முறை

Devaradiyar system in Tamil Nadu

M. Kayalvizhy

Assistant Professor, Department of Tamil, Pachayyappas College for Women, Kancheepuram- 631502, Tamil Nadu

[email protected]

DOI: https://doi.org/10.37134/jov.vol1.2.4.2020 Received: 30 August 2020; Accepted: 11 October 2020; Published: 19 October 2020

Cite this article (APA): Kayalvizhy, M. (2020). தமிழகத்தில் ததவரடியார் முறை. Journal of Valartamil, 1(2), 35-49.

https://doi.org/10.37134/jov.vol1.2.4.2020

ஆய்வுச் சாரம்: தேவரடியார் முறை இறைக்காலத் ேமிழகத்தில் பரவலாகப் பின்பற்ைப்பட்ை முறையாகும்.

இவ்வறகயான மகளிர் றைவ, றவணவ ஆலயங்களில் இறைப்பணிக்காகத் ேம்றம அர்ப்பணித்ேவராவர்.

தகாயில்களிலும் மைங்களிலும் தைறவ சைய்ே தேவரடியார்கறைப் பற்றிய சைய்திகறைக் கல்சவட்டுகள்

எடுத்துறரக்கின்ைன. அவர்கள் கறலகளின் இருப்பிைங்கைாகத் திகழ்ந்ேனர். அவர்கள் தகாயில்களுக்குத் ேம்றம அர்ப்பணிக்கும் நிகழ்வு “சபாட்டுக் கட்டுேல்” என்று சபயர். அவர்களுக்குத் “ேறலக் தகாலி” என்ை பட்ைமும்

வழங்கப்பட்ைது. தேவரடியார்கள் பல்தவறு ோனங்கறை வழங்கிச் ைமூகத்தில் சிைப்புப் சபற்ைனர். ஆனால்

காலப்தபாக்கில் அவர்கள் வீழ்ச்சிறயச் ைந்தித்து “தேவோசிகள்”, “ோசிகள்” என்ை சபயரில் துயர வாழ்வு வாழ்ந்து

மறைந்ேனர்.

கருச்சசாற்கள்: தகாயில்கள், கறலப் புரவலர்கள், சபாட்டுக் கட்டுேல், ேறலக் தகாலி, ோனங்கள், வீழ்ச்சி

Abstract: Devaradiyar system was a practise which was followed during the mediaeval period of Tamil Nadu. They were the women whom dedicated their life for Siva and Vaishnava temples. Number of devaradiyars were served in the temples which was exposed by the inscriptions. They were skilled in art such like Dance, Music and Drama and developed it for centuries. Some women married and some other unmarried and they followed the practise “Pottu Kattuthal”. The Tamil kings honoured them by giving the title of “Thalaikkoli”. Devaradiyars gave huge donations to the temples and served for welfare of the society. They also availed more privileges at that time. But course of time due to various problems and downfalls they lost their honour and struggled for their livelihood. In course of time they were called as “Devadasis” and “Dasis”. Raise and fall of Devaradiyar system has been considered as notable event in the social history of the Tamils.

KeyWords: Temples, Art, Pottu Kttuthal, Thalaikkoli, Donations, Downfall, Devadasis

(2)

முன்னுறர

“மாேர் ேம்றம இழிவு சைய்யும்

மைறமறயக் சகாளுத்துதவாம்”

என்ைார் பாரதி. அந்ே அைவுக்கு அவர் வாழ்ந்ே காலத்திலும் அேற்கு முன்பும் சபண்கள் இழிவு

படுத்ேப்பட்ைனர். இந்ேப் புன்றமறயக் கண்டுோன் மனம் சபாைாமல் அவர் சபாங்கி எழுந்ோர். இன்று

ைமுோயத்தின் தூண்கைாகக் கருேப்படும் சபண்கள் சோைர்ந்து இழிவும் அவமானமும் படுத்ேப்பட்ைனர்.

இந்ே அவமானத்தின் சின்னங்கைாகத்ோன் தேவரடியார் முறை திகழ்ந்து வந்ேது. இந்தியா முழுவதும்

பரவலாகக் காணப்பட்ை இம்முறை ேமிழகத்தில் சிைப்பாகக் கறைபிடிக்கப்பட்ைது. தேவரடியார்களுக்கு

இச்ைமூகம் மிகுந்ே அநீதிறய இறழத்துள்ைது.

இறைக்காலத் ேமிழ்ச் ைமுோயத்தில் தேவரடியார்களின் பங்கு இன்றியறமயாேோகும். அவர்கள்

திருக்தகாயில்களில் பணியாற்றிப் பக்ேர்களுக்கும் சோண்ைர்களுக்கும் அருைாைர்களுக்கும் கறலயின்பத்றே

வாரி வழங்கினர். அவர்கதை நுண்கறலகளின் (Fine Arts) புகலிைங்கைாகவும் திகழ்ந்ேனர். ேமிழ்ச் ைமய வரலாற்றிலிருந்து அவர்கறைப் பிரித்துப் பார்க்க இயலவில்றல. ேமிழர்களின் திருக்தகாயில்

சையல்பாடுகளில் அவர்களின் பங்களிப்பு அைப்பரியது. அவர்கறைப் பற்றியும் அவர்கள் ஆற்றிய பணிகள்

பற்றியும் ஏராைமான கல்சவட்டுகள் புகழ்ந்துறரக்கின்ைன. எனதவ தேவரடியார்கறைப் பற்றி இக்கட்டுறர ஆராய்கின்ைது

ேமிழர்கள் ைமயப்பற்று மிக்கவர்கள். எனதவ ஊர்கள் தோறும் அவர்கள் தகாயில்கறை அறமத்ேனர்.

தகாயில்களும் மைங்களும் அவர்கள் வாழ்வுைன் பின்னிப் பிறணந்திருந்ேன. இக்தகாயில்களில் பணிபுரிந்ே

பணியாைர்கள் “திருக்தகாயில் பணியாைர்கள்” என்று சிைப்புைன் அறழக்கப்பட்ைனர். அக்காலக்

தகாயில்களில் பணிபுரிய ஏராைமான நபர்கள் தேறவப்பட்ைனர். இது ேவிரக் தகாயில் திருவிழாக்களில்

இறை, நைனம், கூத்து தபான்ை நுண்கறலகறை நிகழ்த்ேக் கறல வல்லுநர்கள் தேறவப்பட்ைனர்.

இத்தேறவகறை நிறைவுசைய்யத் திருக்தகாயில்களில் பணியாற்றியவர்கதை தேவரடியார்கள் ஆவர்.

இக்தகாயில்களுக்காகத் ேம் வாழ்க்றகதய அர்ப்பணித்ேவர்கள் இப்பணிமக்கள்.

கறல என்பது மிகவும் நுட்பமான ஒன்று. எனதவ அது நுண்கறல என்று அறழக்கப்பட்ைது.

நுட்பமான இக்கறலறயப் பயிற்றுவிக்க நுட்பமான இயல்புறைய மகளிர் தேறவப்பட்ைனர். நுண்கறலகள்

ஆண்கறைவிைப் சபண்களுக்தக எளிதில் வாய்க்கும் என்போல் அவர்களுக்தக அது பயிற்றுவிக்கப்பட்ைது.

மனிேன் மனறே வைப்படுத்தி மகிழ்விக்கும் இயல்புறைய இறை, நைனம், பாட்டு, கூத்து தபான்ை

இயல்களில் மகளிர் பாண்டித்தியம் சபற்று அவற்றைப் சபாதுமக்களுக்கு சவளிப்படுத்தித் ோமும் மகிழ்ந்து

பிைறரயும் மகிழ்வித்ேனர். சபாழுது தபாக்கு அம்ைங்கள் அதிகம் இல்லாே அக்காலத்தில் இறவகதை

மக்களின் வாழ்வில் இைம்பிடித்ேன. இறைக்காலத்தில் இக்கறலகளின் வித்ேகர்கைாகத் தேவரடியார்கள்

(3)

திகழ்ந்ேனர். தகாயில்களில் மட்டும் அவர்ேம் கறலத் திைன் சவளிப்பட்ைாலும் அங்குச் சைன்று வழிபட்ை

அறனவரும் அவற்றைத் துய்த்து மகிழ்ந்ேனர்.

ஆய்வு முன்த ாடிகள்

ேமிழகத்தில் ைங்க காலம் முேல் சபண்களின் நிறலப்பற்றி சபாதுவான ஆய்வு தமற்சகாள்ைப்பட்டுள்ைது.

ஆனால் தேவரடியார் பற்றியும் தேவரடியார் முறைப் பற்றியும் குறைவான ஆய்தவ தமற்சகாள்ைப்

பட்டுள்ைது. இவ்வாய்வு சபருமைவு சோல்லியல் ைார்ந்து இருப்போல் அதிக அைவு ஆய்வு

தமற்சகாள்ைப்பைவில்றல.

திரு A.S.Altekar என்பவர் The position of women in Hindu Civilization (1956) என்ை நூலில்

இந்தியாவில் சபண்கள் நிறலறயப்பற்றி விரிவாகவும் தேவோசி முறைறயப்பற்றிச் சுருக்கமாகவும்

குறிப்பிடுகின்ைார்.

இது ேவிர, திரு Dr.Daud Ali என்பவர் இயற்றிய நூலான Doners, Devotees, Daughters of God:

Temple Women in Medieval Tamil Nadu (2000) என்பது ேமிழ்நாட்டில் தேவோசி முறைறயப்பற்றி

எடுத்துறரக்கின்ைது.

திரு K.Chakarabothy என்பவரின் நூலான Women as Devadasis: Origin and growth of the Devadasi Profession (2000) என்பது இந்தியாவில் தேவோசி முறையின் தோற்ைத்றேயும் வைர்ச்சிறயயும்

முடிறவயும் எடுத்துறரக்கின்ைது.

திரு L.A.K.Iyer இயற்றிய கட்டுறரயான Devadasis in South India: Their origin and development (1926) என்பது சேன்னிந்தியாவில் தேவோசி முறையின் தோற்ைத்றேயும் வைர்ச்சிறயயும்

எடுத்துறரக்கின்ைது.

இது ேவிர ைாக்ைர் தக.தக.பிள்றை இயற்றிய A Social History of The Tamils (1969) என்ை

நூலும் ைாக்ைர்அ.சுவாமிநாேன் இயற்றிய Social and Cultural History of Tamil Nadu (1991) என்ை

நூலும் ேமிழ்நாட்டில் தேவரடியார் முறைறயப் பற்றி சுருக்கமாக எடுத்துறரக்கின்ைது.

இறவ யாவும் தேவோசி முறை பற்றி தமற்சகாள்ைப்பட்ை ஆய்வு முன்தனாடிகைாகும்.

(4)

ஆய்வுச் சிக்கல்

1. ைமூகப் புன்றமயான ோசி முறை தேவரடியார் முறையின் சோைர்ச்சியா?

2. இறைக்காலத்தில் தேவரடியார்கள் எவ்வாறு சிைப்பிைம் சபற்ைனர்?

3. இறைக்காலத் ேமிழகத்தில் சிைப்பு சபற்றுத் திகழ்ந்ே சபண்களின் நிறல

எவ்வாறு காலப்தபாக்கில் ேரம் ோழ்ந்ேது? தபான்ை தகள்விகறை ஆய்வின் சிக்கல்கைாக முன்றவத்து இந்ே ஆய்வுக்கட்டுறர பறைக்கப்படுகின்ைது. இக்தகள்விக்கான விறைகைாக இக்கட்டுறரயின்

கூறுகள் அறமந்துள்ைன.

ஆய்வின் த ாக்கம்

ேமிழ்ச் ைமுோயம் சபண்றமறயப் தபாற்றும் ைமுோயமாகும். பண்றைய நாள்சோட்டு சபண்கள் உயர்வாக மதித்துப் தபாற்ைப்பட்ைனர். அேற்குச் ைான்ைாக இறைகாலத்தில் வாழ்ந்ே தேவரடியார்கள் திகழ்ந்ேனர்.

அவர்கள் நுண்கறலகளின் இருப்பிைங்கைாகத் திகழ்ந்ேனர். ைாமானியன் முேல் அரைர்கள் வறர அவர்கறைப்

தபாற்றிப் புரந்ேனர். இறைகாலத்தில் அவர்கள் சபற்ை சிைப்றப விைக்குவதுைன், பிற்காலத்தில் அவர்கள்

எவ்வாறு வீழ்ச்சிறயச் ைந்தித்துத் ோசிகள் என்ை ோழ்வான நிறலயில் ேமிழ்ச் ைமுோயத்ோல் ஒடுக்கப்பட்ைனர்

என்பறே விைக்குவதே இவ்வாய்வின் தநாக்கமாகும்.

ஆய்வு முறை

இக்கட்டுறர பகுப்பாய்வு முறைறயயும் விைக்க ஆய்வு முறைறயயும் பின்பற்றி அறமகின்ைது.

ததவரடியார் முறையின் ததாற்ைம்

ேமிழகத் திருக்தகாயில்களில் பணியாற்றிய மகளிர் தேவரடியார்கள் என்ை சபயருைன் அறழக்கப்பட்ைனர்.

இறைவனுக்காக அற்பணிப்பு உணர்வுைன் பணியாற்றிய சோண்ைர்கள் இவர்கள் என்பது அவர்களின்

சபயர்கதை புலப்படுத்தும். தேவரடியார்களின் தோற்ைம் குறித்து இதுவறர எந்ே முடிவும் ஆய்வாைர்கைால்

எட்ைப்பைவில்றல. இவர்கறைப் தபான்று ஆைல் மற்றும் பாைல்களின் வித்ேகிகள் ைங்ககாலம் சோட்டு

இருந்ேதபாதிலும் அவர்கசைல்லாம் தேவரடியார்கைாக சகாள்ைப் பைவில்றல. ைங்கக் காலத்தில் சகாண்டி

மகளிர், பரத்றேயர் தபான்தைார் சபாதுவாழ்வில் இருந்ேனர் (ேமிழ் நாட்டு வரலாறு - ைங்க காலம் ப-ள்:48- 49). ைான்று:

“சநஞ்சில் நடுக்கூறூஉக் சகாண்டி மகளிர்”

(மதுறரக் காஞ்சி:538)

(5)

“சகாண்டி மகளிர் உண்துறை மூழ்கி”

(பட்டினப்பாறல:246)

ஆனால் அவர்கறைசயல்லாம் தேவரடியார்கைாக சகாள்ைவியலாது. ஆைல் கறலயிலும்

வல்லவர்கைாகப் பல சபண்கள் பழம் காலம் சோட்டு இருந்து வந்துள்ைனர். இேற்குச் ைான்ைாகச்

சிலப்பதிகாரத்தில் மாேவிறயக் சகாள்ைலாம். அவள் ஆைல் கறலயிலும், அழகிலும் சிைந்ேவைாக இருந்ேதபாதிலும் “கணிறக” என்ை சபயருைன் காட்சி ேந்து சபான்னுக்கு விறலதபானாள். தேவரடியார்

பற்றிய சைய்திறய முேன் முேலாகப் பல்லவர் காலத்தில் வாழ்ந்ே திருஞானைம்மந்ேப் சபருமாதன குறிக்கின்ைார். அவர் இதுதபான்று சிவாலயங்களில் பணிபுரிந்ே பணிமகளிறரப் பற்றி ேம் பாக்களில்

குறிப்பிட்டுச் சைல்கின்ைார்,

“காந்ோர மிறையறமத்துக் காரிறகயார்

பண்பாைக் கவினார் வீதித்

தேந்ோதமன் ைரங்தகறிச் தையிறழயார்

நாைமாடுந் திருறவயாதை”

(தேவாரம்-திருறவயாறு பதிகம்.பாைல்:6)

எனதவ தேவரடியாறரப் தபான்தை தகாயிற் பணிபுரிந்ே மகளிர் அக்காலத்தில் இருந்துள்ைனர்

என்பது இவற்ைால் சபைப்படுகின்ைது. இதுதவ அவர்களின் தோற்ைமாகக்கூைக் கருேதவண்டியுள்ைது.

இதே சைய்திறய நாவுக்கரைர் சபருமானும் ேம் பாைலில் உறுதி சைய்கின்ைார்,

“ஆருமணித்ேைம் புண்முறல அைம்றபயசரா ைருளிப் படியர்

உரிறமயிற் தைாழுவார் உருத்திரப் பல்கணத்ோர்

சவறிைறை விர திகைந்ேணர் றைவர் பாசுப ேற்கபாலிகள்

சேருவினிற் சபாலியுந் திருவாரூ ரம்மாதன”

(தேவாரம்-திருவாரூர் பதிகம்.பாைல்:3)

இேன் பின்வந்ே தைாழப் பாண்டியர் காலத்திலும் இம்முறை பரவிக்கிைந்ேறேக் கருவூர் தேவர்

பாக்கைால் அறியலாம்,

“மின்சநடும் புருவத்து இைமயில் அறனயர்

விைங்கல்சைய் நாைகச் ைாறல

இன்நைம் பயிலும் இஞ்சிசூழ் நஞ்றை

இராைரா தைச்ைரத் திவர்க்தக”

(திருவிறைப்பா பாைல்:165)

(6)

எனதவ ைங்கக் காலத்தில் தேவரடியார்கள் என்ை முறை காணப் பைவில்றல என்பதுைன், இேன்

சோைர்ச்சியாய் வந்ே பல்லவர்கள் காலத்தில் இவ்வழக்குத் தோன்றியறே இலக்கியச் ைான்றுகள் மூலம் உறுதி

சைய்யலாம். இேற்குப் பின் வந்ே தைாழப் பாண்டியப் தபரரைர்கள் காலத்தில் இம்முறை அவர்கள் ஆேரவில்

பல்கிப் சபருகிச் சிைப்புற்ைது.

ததவரடியார்களின் வறககள்

ேமிழகக் தகாயில்களில் பணியாற்றிய தேவரடியார்கள் பல்வறகப்பட்ைவர். அவர்கள் ேளிச்தைரிப் சபண்கள்,

ேளியிலார், பதியிலார், வழியிலார், தேவரடியார்கள், தகாயில் பிணாக்கள், ேறலக்தகாலிகள், உருத்திரகணிறகயர் என்ைறழக்கப்பட்ைனர். இவர்கள் பல சபயர்களில் அறழக்கப்பட்ைாலும் இவர்கள்

அறனவரும் ஒரு வகுப்பினதர. திருக்தகாயில் ைார்ந்ே இைங்களில் வாழ்ந்து வந்ே சபண்டிர் ேளிச்தைரிப்

சபண்கள் என்றும் இறைவனுக்குத் சோண்டு புரிவறேதய வாழ்வாகக் சகாண்ைவர்கள் தேவரடியார்கள்

என்றும் நாட்டியத் துறையில் வல்லவர்கள் நாைகக் கணிறகயர் என்றும் யாறரயும் மணம் புரியாமல்

வாழ்ந்ேவர்கள் பதியிலார் என்றும் உைவுகள் யாருமற்றுக் தகாயிறலச் ைார்ந்து வாழ்ந்ே சபண்கள் வழியிலார்

என்றும் சிவன் தகாவிலுக்கு தநர்ந்து விைப்பட்தைார் உருத்திரக் கணிறகயர் என்றும் அறழக்கப்பட்ைனர்

(ைோசிவ பண்ைாரத்ோர்.தி.றவ.ப:477)

இது தபான்று சோண்டு சைய்ே சபண்டிர் இறைக்காலத் ேமிழகத்தின் தகாயில்களில் ஏராைமாதனார்

காணப்பட்ைனர். அவர்கள் தேவரடியார்கள் என்பறே தவறுபடுத்திக் காட்ை அவர்கள் தோள்களிலும், பாேங்களிலும் இலச்சிறன அறையாைங்கள் சபாறிக்கப்பட்ைன. சிவன் தகாயில் பணிபுரிந்ேவர்களுக்குச்

சூலம் மற்றும் நந்தி இலச்சிறனயும் றவணவக் தகாயில்களில் பணிபுரிந்ேவர்களுக்குச் ைங்கு அறையாைமும்

முத்திறரகைாகப் சபாறிக்கப்பட்ைன. ைான்ைாகக் காைஹஸ்தி தகாயிறலச் ைார்ந்ே தேவரடியார்கறைச்

தைாழமன்னனின் ஆட்கள் ேவறுேலாகப் பிடித்து வந்து அரைனின் பணியில் தைர்த்து விட்ைனர். அவர்களின்

உைலில் இருந்ே சூல இலச்சிறன அழிக்கப்பட்டு அரைனின் இலச்சிறனயான புலி உருவம்

சபாறிக்கப்பட்ைது. பின்னர் உண்றம அறியப்பட்ைதும் அவர்கள் மீண்டும் தகாயில் பணியில்

தைர்க்கப்பட்ைனர். அவர்கள் உைலில் இருந்ே அரசு முத்திறர அழிக்கப்பட்டு மீண்டும் சூல முத்திறர சபாறிக்கப்பட்ைது (ARE.No:141/1922). அவர்களின் உைல்களில் இலச்சிறன முத்திறரகள்

சபாறிக்கப்பட்ை சைய்திறயக் கீழ்க்கண்ை பாைலும் உணர்த்தும்,

“தீயிற் தபாலிஇறை சைஞ்சுைர் ஆழி

திகழ்திருச் ைக்கரத்தின்

தகாயிற் தபாறியாதல ஓன்றுண்டு நின்று

குடிகுடி ஆட்சைய்கின்தைாம்”

(திருப்பல்லாண்டு. பாைல்:7)

இது தபான்ை நைன மாேர்கள் அரைர்கறைச் ைார்ந்திருந்ோல் அவ்வரைர்களின் முத்திறரகள் அவர்களின்

உைலில் சபாறிக்கப்பட்ைன. ைான்ைாகச் தைாழ மன்னர் பணியில் இருந்ே மகளிருக்குப் புலி முத்திறர சபாறிக்கப்பட்ைது. ஆனால் எக்காலத்திலும் பிராமண இனத்ேவர் எவரும் தேவோசிகைாக ஆக்கப்பைவில்றல என்பது குறிப்பிைத்ேக்கது. இவ்வாறு தேவோசிகள் தகாயிலுக்கு அளிக்கப்படும்

(7)

நிகழ்வானது தகாயில்களில் விழாவாகக் சகாண்ைாைப்பட்ைது. இச்சிைப்பான நிகழ்வில் சபண்கள்

திருமாங்கல்யத்றே இறைவதன கட்டுவோக எண்ணித் ேம் கழுத்தில் கட்டிக்சகாள்வர். அன்று முேல்

கைவுைதர அவர்ேம் கணவனாகக் கருேப்பட்ைனர். இச்ைைங்கு ைான்தைார்கள் முன்பு நிகழ்த்ேப்பட்ைது. அன்று

முேல் இப்சபண்டிர் தேவரடியார் என்ைறழக்கப்பட்ைனர். அவர்கள் அணிந்ே ோலி வட்ைவடிவில் சிறிய சபான்றனப் தபான்று காணப்பட்ைது. திருமணம் சைய்யாமல் வாழும் தேவரடியார்கள் மட்டும்

இத்ோலிறயக் கழுத்தில் கட்டிக்சகாள்வர். பிை மகளிர் கழுத்தில் அணிய மாட்ைார்கள். இந்நிகழ்வு “சபாட்டுக்

கட்டுேல்” என்ைறழக்கப்பட்ைது.

ததவரடியார்களின் பணிகள்

தேவரடியார்கள் திருக்தகாயில் பணிக்காகத் ேம் வாழ்றவதய அற்பணித்து அங்குப் பணிபுரிந்து வந்ேனர்.

அவர்கள் பணி யாது என்று அக்கால அரசினர் சேளிவாக வறரயறை சைய்திருந்ேனர். அவர்கள் அன்ைாைம்

தகாயில்களில் உள்ை பணிகறைச் சைம்றமயுைனும், அற்பணிப்பு உணர்வுைனும் சைய்துவந்ேனர்.

தகாயில்களில் அலகிடுேல், அரிசிறயத் தூய்றமயாக்குேல், சமழுகிடுேல், மலர் சோடுத்ேல் தபான்ை

பணிகறை தமற்சகாண்ைதுைன் தேவாரம், திருவாைகம், திவ்யப் பிரபந்ேம் தபான்ை திருப்பாக்கறை

இறையுைன் ஓேவும் சைய்ேனர். இவர்கள் நைனம், கூத்து தபான்ை கறலகளில் வித்ேகர்கைாகவும் திகழ்ந்ேனர்.

தமலும் இறைவன் திருவீதி உலா வரும்தபாது பாைவும் தவட்றைத் திருவிழாவின்தபாது நைனமாைவும்

சைய்ேனர் (ARE.No:397/1922). இது ேவிர இன்ன பதிகங்கறை இன்ன முறையில் பாைதவண்டும் என்று

முடிசவடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ேது (ARE.No:143/1940-41). ைான்ைாகத்

திருவதிறகயில் சுவாமி எழுந்ேருளும் தபாது பதியிலார் ஆைவும் திறரசயடுத்ோல் தேவரடியார் ஆைவும்

திட்ைம் சைய்யப்பட்டிருந்ேது (SII.Vol:7.No:333).

பாண்டிய நாட்றைச் ைார்ந்ே தேவரடியார்கள் பணிகறை பாண்டிய மன்னர்கள் சேளிவுைன்

வகுத்ேளித்ேனர். ைான்ைாகத் திருத்ேருறவ சிவன் தகாயில் காறல பூறைக்கும் திருவடி பூறைக்கும் மாறல பூறைக்கும் திருவந்தி காப்புக்கும் ைந்ேனம் அறரத்ோல், மாறல சோடுத்ேல், மகாமண்ைபம் மற்றும் பிரகாரம்

சபருக்குேல் தபான்ை பணிகறை இவர்கள் சைய்யக் கட்ைறையிைப்பட்டிருந்ேது (ARE.No:373/1935-36). இரண்ைாம் ைைாவர்மன் சுந்ேரபாண்டியன் காலத்தில் தகாயிலுக்கு வழங்கப்பட்ை சநல்றலக் குற்றி

அரிசியாக்கிக் தகாயில் பிரைாேம் வழங்கும் பணியிறனயும் இவர்கள் சைய்து வந்ேனர் (ARE.No:370/1916).

சிலர் கைவுள் வீதி உலா வரும்தபாது ைாமரம் வீைவும் (ARE.No:363/1950-51) சிலர் தினப்பூறையின் தபாது

சேய்வச்சிறலயின் முன் ஆைவும் பாைவும் சைய்ேனர் (ARE.No:242/1940-41). சிலைமயம்

திருவிழாவின்தபாது இவர்கள் திருத்ேட்றை ஏந்ேவும் மலர்ேட்றை ோங்கவும் சைய்ேனர். ைான்ைாக ஒவ்சவாரு

ஆண்டும் திருசவாற்றியூரில் உள்ை தகாயில் திருவாதிறர திருவிழாவின்தபாது தேவரடியார்கள்

திருசவம்பாறவ ஓதினர், அவ்வமயம் 22 ேளியிைார் நைனம் ஆடினர், ஒருவர் நட்டுவாங்கம் சைய்ோர், 16 தபர் தேவாரப் பதிகங்கறை அகமார்க்க முறையில் பாடினார் (ARE.No:128/1912).

(8)

ததவரடியார் முறையின் இயல்புகள்

தேவரடியார்கள் ோதம விரும்பி இப்பணிறய ஏற்றுக் சகாண்ைார்கள். சிலர் அவர்களின் குடும்பத்ோரால்

விரும்பிதயா, விரும்பாமதலா தகாயில்களுக்கு அற்பணிக்கப்பட்ைனர். திருவலம் விஸ்வநாேர் தகாயிலுக்கு

அழகிய பாண்டியன் பல்லவராயன் என்பவன் ேன் குடும்பப் சபண்கள் ஐவறர தேவரடியாராக அற்பணித்து

“திருவல்லம் உறையார் திருப்பாேத்தில் உேகம்

பண்ணித் திரிசூலம் ைாட்டி தேவரடியாராக விட்தைன்”

என்று கூறுவது இறே உணர்த்தும் (ARE.No:230/1921). தவறு சிலர் விறலக்கு வாங்கப்பட்டுக்

தகாயில்களுக்குத் ோனமாக வழங்கப்பட்ைனர். ைான்ைாகத் திருவக்கறர ைந்திரசமௌளீஸ்வரர் ஆலயத்திற்கு

அவ்வூரின் மூன்று தவைாைர்கள் ஒரு சபண்றணயும், அவளின் மகறையும், அவளின் குழந்றேறயயும்

விறலக்கு வாங்கித் ோனமாக அளித்ேனர் (ARE.No:183/1904). இச்சைய்திறய உணர்த்தும் கல்சவட்டு

வருமாறு:

“எங்கைடியார் அங்காடியும் இவள்

மகள் தபரங்காடியும் இவள்

மக்களும் திருவக்கறரயுறைய மாதேவற்க்கு தேவரடியாராக நீர்வார்த்துக் குடுத்தோம்”

இராைராைன் ஆட்சிக் காலத்தில் ஒருவர் நான்கு சபண்கறை எழுநூறு காசுக்கு வாங்கிக் கி.பி. 1174 இல் திருவலங்காட்டு தகாயிலுக்கு அளித்ோர் (ARE.No:80/1913). தமலும் திருவண்ணாமறலயில்

திருவண்ணாமறல மாணிக்கம் என்ை சபண் ோனும் ேன் குடும்பமும் தைர்ந்து விருப்பத்துைன்

அண்ணாமறலயார் தகாயிலில் பணிபுரிந்ோள் (ARE.No:530/1902). பல தேவரடியார்கள் மணம்புரிந்து

வாழும் உரிறம சபற்றிருந்ேனர். ைான்ைாகத் திருசவாற்றியூரில் நாகன் சபருங்காைன் என்பவனின் மறனவி

ைதுரைன் ைதுரி என்பவள் அவ்வூர் தகாயிலில் தேவரடியாராகப் பணிபுரிந்ோள் (ARE.No:147/1912). அச்சுேமங்கலம் தகாயிலில் திருமணமான தேவரடியார்கள் சோண்டு புரிந்துவந்ேனர் (ARE.No:411/1925).

திருச்ைத்துறை தகாயிலில் தைாழன் நிருத்ேப் தபரறரயன் என்பவனின் மகள் ேன் கணவனுைன் பணிபுரிந்து

வந்ோள் (ARE.No:206/1931). திருவாேவூரில் ஆலாலசுந்ேரம் நங்றக என்ை சபண் பட்ைன் தேவன்

என்பவறன மணம் புரிந்ே பின்னரும் பணி சைய்து வந்ோள் (ARE.No:471/1962-63). இவற்ைால்

தேவரடியார்களில் சிலர் மணம் புரிந்தும் சிலர் மணம் புரியாமலும் தகாயிலில் பணிபுரிந்து வந்ேனர் என்பது

புலனாகின்ைது.

(9)

ததவரடியர்களின் கறைப்பணிகள்

தேவரடியார்கள் நுண்கறல வித்ேகர்கைாகத் திகழ்ந்ேனர். அவர்கள் இறைக்கறலயிலும் நாைகக்கறலயிலும்

வல்லவர்கைாகத் திகழ்ந்ேனர். அவர்கள் சிவன் தகாயிலில் தேவாரம், திருவாைகம் தபான்ை பக்திப்

பாக்கறையும், றவணவ ஆலயங்களில் பிரபந்ேப் பாக்கறையும் ஓதிவந்ேனர். இவர்களின் சிைப்பான ஆட்ைத்

திைறமறயக் கண்ை அக்காலச் ைமூகம் இவர்கறை “கூத்ோடும் தேவரடியார்” என்று சிைப்புைன் அறழத்ேது

(SII.Vol:7.No:112). இறையில் வல்ல தேவரடியார்களுக்கு “ேறலக்தகாலி” என்ை சிைப்பு பட்ைமும்

அரைர்கைால் வழங்கப்பட்ைது. இப்பட்ைம் அவர்களின் சபயர்களுைன் தைர்த்து வழக்கிலிருந்ேது. ைான்ைாகப்,

1. பதியிலார் நக்கன் அரங்கமான சையங்சகாண்ை தைாழத் ேறலக்தகாலி, 2. நக்கன் பவழக்குன்ைான மதுராந்ேக ேறலக்தகாலி, (SII.Vol:15.No:520), 3. அருள்தேவனார் மகைான நக்கன் பிரேமாதேவியான

4. மும்முடிச் தைாழத் ேறலக்தகாலி (ARE.No:563/1926),

தபான்ை சிைப்பான தேவரடியர்களின் சபயர்கள் கல்சவட்டுகளில் காணப்படுகின்ைன. அவர்கறைக்

கறலயில் வல்லவர்கைாக ஆக்கவும் இறையின் நுட்பங்கறை ஓதுவிக்கவும் நைனக் கறலறயப்

பயிற்றுவிக்கவும் பல திைறமயான நட்டுவனார்கள் பணியமர்த்ேப் பட்ைனர் (SII.Vol:5.No:750).

அவர்களுக்கு அரசினரால் ஊதியம் வழங்கப் பட்ைது.

ததவரடியர்களின் சிைப்புகள்

தேவரடியார்கள் ேம் திைறமயாலும் தைறவயாலும் பழந்ேமிழ் ைமூகத்தில் சபருமதிப்பும் மரியாறேயும்

சபற்றிருந்ேனர். அவர்களின் சேய்வப் பக்தியும் அைச்சிந்ேறனயும் ஒழுக்கவாழ்வும் சபாதுச் தைறவயும்

சைல்வவைமும் குணநலனும் தபாற்றுேற்குரியோகத் திகழ்ந்ேது. தைாழர் காலத்தில் புகழ்சபற்றுத் திகழ்ந்ே

தேவரடியார்களின் சபயர்கறைக் கல்சவட்டுகள் சைப்புகின்ைன. அறவ வருமாறு:

1.சபரிய ேளிச்தைரி நக்கன் சிலம்பு

2.ஆயிரம் ேளி நக்கன் பூங்கா

3.சபரிய ேளிச்தைரி நக்கன் மாதேவி

4.ேளி நக்கன் கருமாணிக்கம்

முேலாம் இராைராைன் ோன் கட்டுவித்ே ேஞ்றை சபரிய தகாயிலில் பணிபுரிய நாடு முழுவதிலும் உள்ை

திைறமயான தேவரடியார்கள் நானூறு தபறரத் சேரிவு சைய்து அவர்கறைப் பணியமர்த்தினான். இவர்கள்

ேங்குவேற்குக் தகாயிலுக்கு வைக்கு சேற்காக அறமந்ே சேருக்களில் வீடுகறைக் கட்டி அவர்கறைக்

(10)

பணியுைன், தகாயில் ைார்ந்ே நிர்வாகப் பணியிறனயும் சிைப்புைன் தமற்சகாண்டிருந்ேனர். ைான்ைாகத்

திருப்பத்தூரில் ைைாவர்மன் சுந்ேர பாண்டியன் காலத்தில் அவன் அரசி நம்பிராட்டியார் அவனி முழுவதும்

உறையாள் என்பார் அவ்வூர் சிவன் தகாவிலுக்கு வழங்கிய அைக்கட்ைறைறயப் பராமரிக்கும் சபாறுப்றப அக்தகாவிலின் தேவரடியார் குலதைகர மாணிக்கம் என்பவளிைம் ஒப்பறைத்ோர் (ARE.No:190/1935-36).

அவளும் அறேத் திைறமயுைன் நிர்வாகம் சைய்ோள். இவற்ைால் ஆைல் கறலயுைன், நிர்வாகத் திைனும்

இவர்களுக்கு வாய்க்கப் சபற்றிருந்ேது புலனாகின்ைது.

ததவரடியார்களின் சதாண்டுகள்

தேவரடியார்கள் இறைப்பணிறயயும் சபாதுச்தைறவறயயும் ேம் வாழ்வின் இருகண்கைாகக் கருதி

வாழ்ந்ேனர். அவர்கள் வழங்கிய பலவிேக் சகாறைகளும் நிவந்ேங்களும் இறே நன்குணர்த்தும். ோம் ஈட்டிய சைல்வத்றேப் பலவிே நற்பணிகள் சைய்து மக்கள் மனதில் நீங்க இைம் பிடித்ேனர். பிைருக்கும் ைமுகத்திற்கும்

இவர்கள் சைய்ே சோண்டுகறை நாடு முழுவதும் உள்ை கல்சவட்டுகள் உணர்த்தும். ைான்ைாக உத்திரதமரூர்

தகாயிலின் சவளிப்பிரகாரச் சுவறரயும் அபிதேக மண்ைபத்றேயும் ஆயிரத்து இருநூற்று மாணிக்கம் என்ை

தேவரடியார் அறமந்து ேந்ோள் (ARE.No:172/1923). ஊட்ைத்தூரின் சோகுமாணிக்க நாயனார் தகாயிலில்

அம்மன் ைன்னதிறயயும் பிரகாரத்றேயும் சிவகாமசுந்ேரி மாணிக்கம் என்பவள் கட்டுவித்ோள்

(ARE.No:330/1929). திருப்பாறலவனத்தில் உள்ை மைத்தில் அடியார்களுக்கு அமுது பறைக்கக் கண்ை

தகாபால மாணிக்கம் என்பவள் ஒரு அைக்கட்ைறைறய ஏற்படுத்தினாள் (ARE.No:177/1918).

பிரம்மதேைத்தில் உள்ை ைந்திர சமௌலீஸ்வரர் தகாயிலில் தினமும் விைக்சகரிக்க முப்பத்திசரண்டு

பசுக்கறையும், ஒரு காறைறயயும் தகாயிலுக்குத் ோனமாக அவ்வூர் தேவரடியார் அளித்ோள்

(SII.Vol:5.No:360). திருசவாற்றியூரில் உள்ை சிவன் தகாயிலில் நுந்ோ விைக்சகரிக்க ைாணி ஒற்றி ஆழ்வி

என்பவள் நிவந்ேம் அளித்ோள். திருவலஞ்சுழி தகாயிலில் திருநாவுக்கரைர், மாணிக்கவாைகர், கண்ணப்ப நாயனார் தபான்தைாரின் படிமங்கள் அறமக்க இரண்டு தேவரடியார்கள் நிலக்சகாறை வழங்கினர்

(SII.Vol:8.No:288).

திருசநல்தவலி பிரம்மபுரி தகாயிலில் ைாத்ேன் தேயம் என்பவள் ஒரு நுந்ோ விைக்கு றவத்ோள்

(SII.Vol:14.No:8). இதே மாவட்ைம் வள்ளியூரில் உலக முழுவதும் உறையாள் என்ை ைாந்தி கூத்தி அம்மன்

தகாயில் ஒன்றைக் கட்டுவித்ோள் (ARE.No:364/1929-30). திருப் சபருங்குைம் சிவன் தகாயிலில்

லிங்கத்றேயும் பிள்றையாறரயும் சுப்பிரமணியறரயும் உருமச் சுந்ேரத் ேறலக்தகாலி மற்றும் சிவஞானத்

ேறலக்தகாலி என்ை இருவர் அறமத்துத் ேந்ேனர் (ARE.No:230/1929-30). இது ேவிர தவறுவிேமான சோண்டுகறையும் தேவரடியார்கள் சைய்ேறேச் ைான்றுகள் உணர்த்தும். ைான்ைாகத் திருவாேவூர்

திருமறைநாேர் தகாயிலுக்குச் சைாந்ேமான ஊர்கள் சில சைல்வர்களிைம் கைனாக அறைமானத்தில் கிைந்ேன.

இறேயறிந்ே ஆலாலசுந்ேரம் நங்றக என்ை தேவரடியாள் சபாருள் ேந்து அறே மீட்ைதுைன் அக்தகாயிலில்

ைந்திரதைகரர் சிறலறயயும் அறமத்து அேற்கு விறலயுயர்ந்ே அணிகலன்கறையும் ோனமாக அளித்ோள்

(ARE.No:471/1962-63).

(11)

ததவரடியார்களின் உரிறைகளும் சலுறககளும்

தேவரடியார்கள் ேம் சிைப்பான பணிகளுக்காகவும் ேன்னலமற்ை தைறவகளுக்காகவும் அரைர்களும்

உயர்குடியினரும் சபாதுமக்களும் ஆலயங்களும் அவர்களுக்குப் பல விேச் சிைப்புகள் சைய்து அவற்றைக்

கல்சவட்டுகளில் பதியச்சைய்து பின்வரும் ேறலமுறை அறியுமாறு சைய்ேனர். ைான்ைாகக் கங்றக சகாண்ை

தைாழபுரத்தின் தகாயிலில் பணியாற்றிய 24 தேவரடியார்களுக்கு சபான்னும் சபாருளும் அணியும் மணியும்

நிலமும் வீடும் முேலாம் இராதைந்திரச் தைாழனால் வழங்கப்பட்ைது. தமலும் இக்தகாயிலின் சித்திறரத்

திருவிழாவில் ைாந்திக் கூத்து என்ை நாைகத்தின் ஒன்பது அங்கங்கறையும் நன்ைாக நடித்துக்காட்டிய ஏழுநாட்டு

நங்றக என்பவளுக்கு நிலங்கள் ோனமாக வழங்கப்பட்ைது (ARE.No:253/1914). இராமநாேபுரம் திருமாலு

கண்ைான் தகாட்றையில் முேலாம் ைைாவர்மன் குலதைகரன் காலத்தில் தேவரடியார்களுக்கும் அவர்கள்

வாரிசுகளுக்கும் சில ைலுறககள் வழங்கப்பட்ைன. அறவயாசேனில் அவ்வூரில் வாழும் தேவரடியார்களின்

சபண்வாரிசுகளுக்கு நாசைான்றுக்குக் தகாயில் ைார்பில் இரண்டு நாழிறக சநல் வழங்கப்பட்ைது. ஆண்வாரிசு

இல்லாே மகளிருக்கு மட்டுதம இச்ைலுறக வழங்கப்பட்ைது குறிப்பிைத்ேக்கது. அவ்வாறு சநல் வழங்க இயலாே நிறல ஏற்பட்ை சபாழுது ஒரு மா நன்சைய் நிலம் வழங்கப்பட்ைது (ARE.No:23/1931-32).

தைாழநாட்டில் சிைப்பான ேறலக்தகாலி சபண்களுக்கு 60 மாநிலம் வறர ோனம் வழங்கப்பட்ைது

(ARE.No:211/1912). அரைர்கள் மட்டுமல்லாமல் சபாதுமக்களும் இவர்கைது பணிறயப் பாராட்டிப் பல

ைலுறககள் வழங்கினர். ைான்ைாகச் சிற்றிங்கூரில் உள்ை திருப்புலிபகவ நாயனார் தகாயிலில் ஆைல் கறலயில்

வல்ல நிறுத்ே விைங்கி என்பவறைப் பாராட்டி அவ்வூர் ைறபதயார் தகாடியூரில் அவளுக்கு நிலங்கறை

வழங்கினர் (ARE.No:370/1909). மன்னார் தகாயிலில் உள்ை தகாபால சுவாமி தகாயிலில் பணிபுரிந்ே

தேவரடியார்களுக்கு அவ்வூர் ைறபயினர் குடியிருக்க வீட்றையும் நிலங்கறையும் ோனமாக வழங்கினர்

(SII.Vol:14.No:132). இராமநாேபுரம் திருமறலக் தகாயிலுக்குச் சிைப்புைன் திருப்பணி சைய்ே ஒரு

தேவரடியாளுக்கும் அவைது ைந்ேதிக்கும் தகாயிலில் நுறழயும் தபாது ைங்கூேவும், பறைசயாலி எழுப்பவம்

தகாயில் நிர்வாகம் சிைப்பு சைய்ேது (ARE.No:33/1924).

ததவரடியார்களின் பிற்காை நிறை

இறைக்காலத் ேமிழகத்தில் சிைப்புைன் சையல்பட்டு வந்ே தேவரடியார் முறையானது

காலப்தபாக்கில் சபரும் வீழ்ச்சிறயச் ைந்தித்ேது. தபரரசு தைாழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்திலும்

அவர்ேம் சிற்ைரைர் காலத்திலும் சிைப்புைன் திகழ்ந்ே இம்முறையானது பல காரணங்கைால் வீழ்ச்சியுற்ைது.

கி.பி. 13 மற்றும் 14 ஆம் நூற்ைாண்டில் ஏற்பட்ை அரசியல் குழப்பங்கள் ேமிழ் மக்கள் அறனவறரயும்

பாதித்து. தபரரசுகளின் வீழ்ச்சி, ஓயாே அயல்நாட்ைவர் பறைசயடுப்புகள், சபாருைாோரச் சீரழிவு, ைமூகப்

தபரரழிவு தபான்ைவற்ைால் ேமிழகதம தபார்க்கைமானது. ஏராைமான மக்கள் வறுறமயில் சிக்கிச் சின்னா

பின்னமானார்கள். பலர் பறைசயடுப்பாைர்கைால் அடிறமகைாகப் பிடித்துச் சைல்லப்பட்ைனர். சைல்லி

சுல்ோனிய பறைசயடுப்புகளும், தபாைைர் பறைசயடுப்பும், சேலுங்கு தைாழர் பறைசயடுப்பும், தைரர்

பறைசயடுப்பும் நாட்றைச் சீரழித்ேது. அவ்வமயம் நாட்டில் அதிகாரப் பலத்துைனும் சபாருைாோர

(12)

வீழ்ச்சிறயச் ைந்தித்ேன. அவற்றின் சைல்வாக்கும், சிைப்பும் முற்றிலுமாக அழிந்சோழிந்ேது. இவற்ைால்

தகாயில்கறைச் ைார்ந்து வாழ்ந்ே தேவரடியார்கள் வாழ்க்றகயும் சபரும் பின்னறைறவச் ைந்தித்ேது.

அரசின் கட்டுப்பாட்டில் இருந்ே வறர இம்முறை கட்டுக்தகாப்புைன் சிைந்து விைங்கிற்று.

தபாருக்குப் பின் எழுந்ே அரசியல் சூழலில் திருக்தகாயில்கள் ேனி நபர்கறைச் ைார்ந்து வாழும் நிறலக்குத்

ேள்ைப்பட்ைது. இேன் காரணத்ோல் தேவரடியார்களும் ேம் வாழ்வாோரத்துக்கு அத்ேனிநபர்கறைச் ைார்ந்து

வாழதவண்டிய வரானார்கள். இவற்ைால் அவர்களின் நிறல முன்சனப்சபாழுதும் இராே அைவு

தமாைமறைந்து. பலர் ஆனாறேகைாகவும், பிச்றைக்காரர்கைாகவும் மாறினர். பலர் வறுறமயில் வாழ்ந்து

மடிந்ேனர். பலர் சைல்வர்களின் பாலியல் பலாத்காரத்திற்கு ஆைாக்கப்பட்ைனர். பலர் உயர்குடியினரின்

காமக்கிழத்தியாய் மாறினர். இன்னும் சிலர் கீழ்நிறல சைன்று விபச்ைாரிகைாக மாறித் ேம் வாழ்றவக் கழிக்கும்

துர்பாக்கிய நிறலக்குத் ேள்ைப்பட்ைனர். இறைக்காலத்தில் அவர்கள் சபற்ை சிைப்றபயும் சபருறமறயயும்

பின்பு வந்ே பல நூற்ைாண்டுகளிலும் பல ஆட்சியாைர்கள் காலத்திலும் அவர்கள் சபைதவ இயலவில்றல.

இவர்கள் 15 ஆம் நூற்ைாண்டு வறர தேவரடியார்கள் என்று சிைப்புைன் அறழக்கப்பட்டு, 16 மற்றும் 17 ஆம்

நூற்ைாண்டுகளில் மரியாறே குறைவுைன் தேவோசிகள் என்று அறழக்கப்பட்ைனர். பின்னர் 18 மற்றும் 19 ஆம் நூற்ைாண்டுகளில் ோசிகள் என்றும் இழிவுைன் அறழக்கப்பட்ைனர்.

தேவரடியார்கள் என்று உயரிய நிறலயில் கறலச்சைல்விகைாக வலம் வந்ே அவர்கள் வாழ்வு

தீவிறனப்பயனாய் தேவோசிகைாகவும் ோசிகைாகவும் ேரம் ோழ்ந்து தினைரிப் பிறழப்பிற்கு ஆள்பிடிக்கும்

தவறலசைய்து ேம்துயர வாழ்க்றகறயக் கழித்ேனர். ஒரு. காலத்தில் கறலத் சோண்டும் இறைப் பணியும்

சைய்து வாழ்ந்ே அவர்கள் பணத்திற்காகச் ைாதுர்யம் புரியும் சபாருட் சபண்டிராக வாழ்ந்ேனர் என்பறேக்

கீழ்க்கண்ை பாைல் உணர்த்தும்:

“சமள்ை வரவறழயுன் வீட்டிதல வந்ோ சலதிர்தபாய்ப்

பரவு சவகுமானம் பண்ணு - சேருவிதல கண்ைா சலழுந்திருந்து நில்லு கனதமாகஞ்

சகாண்ைார்தபால் சமத்ேக் குறழந்துவிடு - சபண்ைாக றவத்ேருளும் தவதை மனம்பிடிக்கு தில்றலசயன்று

ைத்தியமாய்ச் சும்மா ேறலயிலடி

ஆறை பைாதே யாறர விறைந்ோ லன்றிநம்தபால்

தவறைக்கு சவள்ைாண்றம தவறுண்தைா - தபறையில்

தவற்சைாருத்தி தபச்சைடுக்க சவாட்ைாதே விம்மியழு

தூற்றுகைக் கண்ணி குடுத்துவிடு - தூற்றுங்

கனவுசவளி வராமல் றகற்நகத்துக் குள்தை

மிைகுசபாடி றவத்ேவதை தவறை”

(சதய்வச்சிறையார் விைலி விடு தூது,பாடல்கள்:332-337)

(13)

இப்சபண்டிரின் ோய்மார்கள் ைாகைம் புரிபவர்கைாகவும், ைதகாேரர்கள் ஆள்பிடிக்கும் தவறலயும்

சைய்து வந்ேனர். ோய்க்குப் பின் மகள் என்று இவ்வழக்கம் சோைர்ந்ேது.;

ததவரடியார் முறையின் ைறைவு

பல நூற்ைாண்டுகள் சிைப்பாகவும், பல நூற்ைாண்டுகள் ேரம் ோழ்ந்தும் காணப்பட்ை இம்முறையானது கைந்ே

நூற்ைாண்டின் சோைக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்ேது. ஆங்கிதலயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1929 இல்

தேவோசி ேறைச்ைட்ைம் முேன் முேலாகக் சகாண்டு வரப்பட்டு இம்முறை ஓரைவு ஒழிக்கப்பட்ைது. பின்னர்

9, அக்தைாபர், 1947 இல் ேமிழ்நாடு தேவோசிகள் ைட்ைத்தின் மூலமாக இம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்ைது. இேன் ஒழிப்புக்கு மூவலூர் இராமாமிர்ேம் அம்றமயாரும், ைாக்ைர் முத்துலட்சுமி

சரட்டியும் மூலகாரணமாக இருந்ேனர். அவர்களின் இறைவிைாே முயற்சியால் இவ்வழக்கம் ஒரு முடிவுக்கு

வந்ேது. பழம் சபருறமமிக்க தேவரடியார்கள் காலத்தின் தகாலத்ோல் அறனவரும் சவறுத்சோதுக்கும்

பாலியல் சோழிலாைர்கைாய் மாறி வாழ்ந்ேது சீர்மிகு ேமிழக வரலாற்றில் இருண்ை நிகழ்வுகைாகவும்

கறைபடிந்ே பக்கங்கைாகவும் துயர்மிகு ைம்பவங்கைாகவும் பதிவு சைய்ய தவண்டியுள்ைது.

ததவரடியார் முறை-ஆணாதிக்கச் சமூகத்தின் சவளிப்பாடு

ேமிழ்ச் ைமுோயம் ஆணாதிக்கச் ைமுோயமாகும். இங்கு ஆண்மகதன யாவற்றிலும் முேனிறல படுத்ேப்பட்ைான். பழம் ேமிழ்ச் ைமுோயத்தில் ஆண்மகன் பலவிேச் ைலுறககள் துய்த்தும், மகளிர் பலவிே

இன்னல்கறை அனுபவித்தும் வந்ேனர். இச்ைமுோயத்தில் கைந்ே நூற்ைாண்டு வறர ேவைாமல்

கறைபிடிக்கப்பட்ை வழக்கங்கைான பலோர மணம், பால்ய விவாகம், றகம்சபண் நிறல தபான்ைவற்ைால்

சபரிதும் பாதிக்கப்பட்ைது சபண்டிதரயாவர். ஆண்கள் எல்லா நிறலயிலும் எப்சபாழுதும் ைலுறககறையும்

இன்பங்கறையும் துய்த்ேனர். ஒருவனுக்கு ஒருத்தி என்ை நியதி நம் ைமுோயத்தின் ோரகமந்திரமாகப்

சபருறமயுைன் கருேப்பட்ை தபாதிலும் அது ஏட்ைைவிதல காணப்பட்ைது. ைான்ைாகப் பாண்டியன்

ைைாவர்மன் குலதைகர பாண்டியன் (கி.பி.1190-1216) அந்ேப்புரத்தில் ஐநூறு சபண்கள் அவனுக்குக்

காமக்கிழத்திகைாக இருந்ேறே மார்தகாதபாதலா (Marco Polo) என்ை தமல்நாட்டுப்பயணி குறித்துச்

சைல்வார் (Neelakanta Sastri.K.A. PP:164-165). அக்காலப் சபண்டிரின் அவல மற்றும் நிராேரவான நிறலறய உணர்த்துவேற்கு இறேவிை தவறு ைான்று இல. அக்காலப் சபண்கள் சவறும் பள்ளியறைப்

பதுறமகைாகவும் உரிறமகள் அற்ை பாறவகைாகவும் ஆேரவற்ை ைைங்கைாகவுதம கருேப்பட்ைேற்கு இதுதவ

ைாலச்சிைந்ே ைான்று. இதே தபான்று அச்ைமூகத்தில் சிைப்பாக வாழ்ந்ே தேவரடியார்கள் கால நிர்ப்பந்ேத்ோல்

வீழ்ச்சியறைந்து தேவோசிகைாகவும், ோசிகைாகவும் மாறியது அல்லது மாற்றியது இச்ைமூகத்தினுறைய தகாரமுகத்தின் சவளிப்பாைாகும். ஓரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தபான்று சீரிய ேமிழ்ச் ைமுோயத்தின்

சகாடுறமயான இன்சனாரு முகத்திற்கு இலக்கணமாக இத்தேவோசி முறை திகழ்ந்ேது.

Referensi

Dokumen terkait

Mohan’s Diabetes Specialities Centre, Chennai, Tamil Nadu Molecular Mechanism of Sulfonylurea Action Sulfonylureas SUs are insulin secretagogues widely used in the management of

Mohan’s Diabetes Specialities Centre, World Health Organization Collaborating Centre for Non communicable Diseases Prevention and Control, Chennai, Tamil Nadu, India, 2Diabetes

Jansons Institute of Technology Approved by AICTE, New Delhl and Affiliated to Anna University, Chennai Coimbatore, Tamil Nadu-641659 www.jit.ac.in ndian Conurote Insttute

Mohan 1Department of chemistry, SRM University, Kattankulathur, Tamil nadu, India 2Membrane laboratory, Department of chemical engineering, Anna university Chennai , India Email:

14 UVK Susnomics Engineering Private Limited Address: 6, Rajaji Nagar Main road, Madipakkam, Chennai – 600 091, Tamil Nadu Contact Person: - Mrs.. Surendra Kumar/

2 SECURED CREDIT CARD TRANSACTION USING MCOP SARAVANAN SK Department of Computer Applications, Valliammai Engineering College, Chennai, Tamil Nadu, India Tel: ; Email:

SRI RAMACHANDRA UNIVERSITY Declared under Section 3 of the UGC Act, 1956 Accredited by NAAC with ‘A’ Grade Porur, Chennai 600 116, Tamil Nadu, India APPLICATION FOR NRI/FOREIGN